உறைய வைக்கும் பனி மூட்டம்.. அமெரிக்காவில் 1431 விமானங்கள் ரத்து!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாக 1,431 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. வட கிழக்கு பகுதிகளான கன்சாஸ், இண்டியானா பொலிஸ், வாஷிங்டன், டென்வர், மிசோரி, செயிண்ட் லூயிஸ், அர்கன் சாஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,609 கிலோ மீற்றர் தூரத்திற்கு பனிப்பொழிவின் தாக்கம் உள்ளது.

இதன் காரணமாக, பாதியளவு அமெரிக்கா வெள்ளை மேகங்கள் போர்த்தியது போன்று காணப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு டென்வரில் உள்ள சாங்ரீ டி கிறிஸ்டோ மலைப்பகுதியில் 45 செண்டி மீற்றர் அளவுக்கு பனி உறைந்து கிடக்கிறது.

பனியின் தாக்கம் காரணமாக வாகன போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் விமான நிலையங்களில் பனி கொட்டிக் கிடப்பதால், ஏராளமான விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் 1,431 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன. மேலும் 12,645 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன. எனவே ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன் மேற்கு மிசோரி மற்றும் செயிண்ட் லூயிஸ் பகுதியில் 41 செண்டி மீற்றர் அளவுக்கு பனி கொட்டிக் கிடக்கிறது. அதேபோல் கிழக்கு பகுதியில் உள்ள கன்சாஸ் மற்றும் ஆர்கன் சாசில் 15 செண்டி மீற்றர் அளவுக்கும், வாஷிங்டனில் 10 செண்டி மீற்றர் பனியும் உறைந்து உள்ளது.

கடுமையான பனி காரணமாக அமெரிக்காவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers