சமூக வலைதள மோகத்தில் - விபரீதமாகும் சேலஞ்சுகள்

Report Print Abisha in அமெரிக்கா

அமெரிக்காவில் bird box blindfold என்ற விபரீதமான சேலஞ்சு போட்டியால் கண்களை கட்டி கொண்டு சாலையில் காரை ஓட்டிய சிறுவர்கள் இருவர் விபத்து ஏற்படுத்தி உள்ளனர்.

விளையாட்டு விபரீதம் ஆகும் என்பது போய் சமூகவலைதள மோகம் விபரீதம் ஆகிகொண்டே போகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் முக்கிய வீதி ஒன்றில் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் இருவர் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த காரை கண்களை கட்டிகொண்டு ஓட்டி வந்துள்ளனர். முக்கிய பகுதியில் நிலை தெரியாமல் மோதியதில் அந்த பகுதியில் உள்ள பல கார்கள் சேதமாகியது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பலர் பயந்து அலறி அடித்து ஓடிதப்பினர். இதில் சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்த சிறுவர்களிடம் விசாரித்ததில் bird boxblindfold என்ற சேலஞ்சை ஏற்று சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட இதுபோன்று செய்ததாகவும். இந்த முறையை சாண்ட்ரா புல்லக் நடித்த நெட்ஃபிக்ஸ் என்ற படம் பார்த்து செய்ய ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பொலிசார் அவர்களின் பெற்றோரிடம் இதுபோன்ற செயல்களில்ஈடுபடாத வண்ணம் பார்த்துகொள்ளும் படி கூறி அனுப்பினர்.

மேலும் இதுகுறித்து பொலிசார் தரப்பில் டிவிட்டர் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்