மகள் திருமணத்தில் உயிருக்கு போராடிய தந்தை செய்த செயல்: நெஞ்சை பிழியும் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தை தனது மகள் திருமணத்தில் நடனமாடிய சம்பவம் நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

ஜிம் ராபர்ட்ஸ் என்பவருக்கு கடந்தாண்டு மூளை புற்றுநோய் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

ஆனாலும் மீண்டும் ஜிம்முக்கு புற்றுநோய் ஏற்பட்டது.

இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து மகளின் திருமணத்தை காண ஜிம் ஆசைப்பட்டது.

அதன்படி ஜிம்மின் மகள் மேரிக்கும் இளைஞருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது நோயாளியான ஜிம் வீல்சேரில் உட்கார்ந்திருந்தார். திருமண நிகழ்வின் போது மேரி, தனது தந்தை ஜிம்முடன் சேர்ந்து நடனமாடினார்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர். இது குறித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதிகளவு பார்க்கப்பட்டது.

இதனிடையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜிம் திருமணம் முடிந்த சில நாட்களில் உயிரிழந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்