பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் சகோதரர் தாமஸ் ஜூனியர் கைது

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பிரித்தானிய இளவரசி மெர்க்கலின் ஒன்று விட்ட சகோதரர் தாமஸ் ஜூனியர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசியின் ஒன்று விட்ட சகோதரரான தாமஸ் ஜூனியர், இன்று அதிகாலை 1.30 மணிக்கு, அவரது வீட்டின் அருகே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அப்போது அவரை சோதனை செய்ததில், அனுமதிக்கப்பட்ட 0.8 வரம்பு அளவை விட 11 சதவீதம் ஆல்ஹகால் அவருடைய ரத்தத்தில் கலந்திருந்தது.

இதனையடுத்து 52 வயதான தாமஸ் ஜூனியரை பொலிஸார் கைது செய்தததோடு, அவருடைய காரையும் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தாமஸ் ஜூனியர் சர்ச்சையில் சிக்குவது முதன்முறையல்ல. இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது காதலியை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்