திருடிய பொருளை பிறப்புறுப்பில் மறைத்து வைத்திருந்த இளம்பெண்! பொலிஸ் விசாரணையில் சிக்கியது எப்படி?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய பிறப்புறுப்பில் விலைமதிப்புடைய வாட்சுகளை மறைத்து வைத்து திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் Miami பகுதியைச் சேர்ந்தவர் Delajurea Brookens. 29 வயதான இவர் பாலியல் தொழிலாளி என கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய் கிழமை பெயர் தெரிவிக்கப்படாத நபரை மியாமி கடற்கரையில் சந்தித்துள்ளார்.

அதன் பின் இருவரும் ஒன்றாக அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரு மரு அருந்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குறித்த நபர் பாத்ரூம் சென்று திரும்பிய போது, தன்னுடைய பையில் இருந்த அதிக விலைமதிப்புடைய ஐந்து ரோலக்ஸ் வாட்சுகள் காணமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் இது குறித்து அவர் Delajurea Brookens-யிடம் கேட்ட போது, அவரிடம் இல்லை என்ற பதில் வந்துள்ளது.

இதையடுத்து Delajurea Brookens திடீரென்று அந்த ஹோட்டலை விட்டு ஓடியுள்ளார். அவரின் பர்சில் பார்த்த போதும் வாட்சுகள் இல்லை.

அதன் பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்த பொலிசாருக்கு புகார் அளித்துள்ளார்.

பொலிசார் Delajurea Brookens-ஐ பிடித்து விசாரித்த போது அவரிடம் ஒரு வாட்ச் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதம் உள்ள நான்கு வாட்சுகள் பற்றி கேட்ட போது தகாத வார்த்தையில் பொலிசாரிடம் பேசியுள்ளார்.

மிகவும் மோசகாம நடந்து கொண்ட அவர் பொலிசாரின் கார் மற்றும் பொலிசார் சிலரை தாக்கியும் உள்ளார்.

இதைத் தொடர்ந்து Delajurea Brookens-ஐ காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிசார் விசாரித்த போதும் எதுவும் சிக்கவில்லை.

பொலிஸ் சிறையில் இருந்த அவர் சிறுநீரை தான் இருந்த இடத்திலே, அதாவது சிறையின் ஒரு ஓரத்தில் கழித்துள்ளார்.

இது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் பொலிசார் அவரை பாத்ரூமிற்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்ட போது அந்த நான்கு வாட்சுகளையும் அவர் பிறப்புறுப்பில் மறைத்து வைத்துள்ளார்.

இதையடுத்து பொலிசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே Delajurea Brookens மீது வழக்குகள் இருப்பதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட வாட்சுகளின் மதிப்பு சுமார் 108,000 டொலர்(தற்போது இலங்கை மதிப்பில் 1,96,49,520.00 கோடி) ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்