உங்கள் மகளை காதலிக்கிறேன்: 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பொலிஸ் அதிகாரி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் 13 வயது சிறுமியை கர்பமாக்கிய விவகாரத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

வட கரோலினா மாகாணத்தில் உள்ள கஸ்டன் கவுண்டி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் மாயமானார்.

பதறிய பெற்றோர் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கை லோவல் பகுதி காவலரான ஜேம்ஸ் "பால்" பிளேயர் என்பவரிடம் காவல்துறை ஒப்படைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை திறமையுடன் மேற்கொண்ட பிளேயர் சிறுமியை கண்டுபிடித்துள்ளார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோரிடம் தம்மை சிறுமியின் வழிகாட்டியாக இருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிய அவர், அதன் பின்னர் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியை தமது உத்தியோகப்பூர்வ வாகனத்தில் அழைத்து சென்ற பிளேயர், வாகனத்தில் வைத்தே சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது பல முறை அரங்கேறிய நிலையில் சிறுமி கர்ப்பமானார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் பிளேயருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோரை மிரட்டிய பிளேயர், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் தாம் தான் எனவும், சிறுமியை தாம் காதலிப்பதாகவும், சிறுமிக்கு பிறக்கும் குழந்தைக்கு தமது பெயரை சூட்ட வேண்டும் எனவும் மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் நடந்தவற்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் பிளேயர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் இருந்து அவரை நீக்க உத்தரவு வெளியானது.

தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிளேயருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது 53 வயதாகும் பிளேயர் அமெரிக்காவில் உள்ள சீர்திருத்த மையம் ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பிளேயர் தொடர்பில் ஏற்கெனவே தெரிந்திருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய லோவர் பகுதி கவல்துறை தலைவர் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்