ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் 2018-ஆம் ஆண்டு மட்டும் எத்தனை கோடி சம்பாதித்துள்ளார் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கின் 2018-ஆம் ஆண்டிற்கான வருமானம் மட்டும் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல டெக் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக டிம் குக் உள்ளார்.

இந்நிலையில் டிம் குக்கிற்கு எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து போனஸ் மட்டும் 12 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளார்.

கடந்த வருடம் இவர் 9.3 மில்லியன் டாலர்களைப் போனஸாக பெற்றார். கடந்த ஆண்டு விற்பனையில் இவர் ஏற்படுத்திய முன்னேற்றத்துக்காக இது கொடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேலும், அவரது சம்பளத்தையும் இந்த வருடம் 22 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

ஆப்பிள். இது போகப்போக இவர் வைத்திருக்கும் பங்குகளிலிருந்து 121 மில்லியன் டாலர்கள் வருமானம் பெற்றுள்ளார்.

மேலும், பிரைவேட் ட்ராவல் மற்றும் செக்யூரிட்டி அலவன்ஸ் என 6,82,000 டாலர்கள் பெற்றுள்ளார்.

மொத்தமாக சுமார் 136 மில்லியன் டாலர்களை 2018-ல் மட்டும் சம்பாதித்துள்ளார். இலங்கை மதிப்பில் தற்போது 24,73,97,60,000 கோடி ரூபாய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers