15 வயது பள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய முன்னாள் அழகி: வசமாக சிக்கிக் கொண்டார்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் மிஸ் கென்டகி பட்டம் வென்ற முன்னாள் அழகி ராம்சேகார்பெண்டர்பியர் பள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்கள் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் Cross Lanes பகுதியில் இருக்கும் Andrew Jackson நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் Ramsey Carpenter Bearse(28).

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு Miss Kentucky பட்டத்தை வென்றுள்ளார். Kentucky-யில் இருக்கும் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பொலிசார் இவரை திடீரென்று கைது செய்தனர்.

அதன் பின் இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இவர் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து குறித்த மாணவனின் போனை பெற்றோர் எதிர்பாரதவிதமாக பார்த்த போது, அதில் Ramsey Carpenter Bearse-ன் நான்கு மேல் ஆடை இல்லாத புகைப்படங்கள் இருந்துள்ளன.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த் அவர்கள் உடனடியாக பொலிசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அதன் பின்னர் பொலிசார் விசாரணையில் இது உறுதியானதால், அவரை கைது செய்துள்ளனர்.

இதை அவர் சமூகவலைதளமான ஸ்நாப் சாட் மூலம் மாணவனுக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து நீத்மன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படவுள்ள இவர் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20-ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க கூடும் என்று குறிப்பிட்டுள்ளது..

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers