முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்றவர்.... லொட்டரியில் கோடிகள் அள்ளிய பெண்: வியக்கும் அனுபவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் முட்டைக்கோஸ் வாங்க கடைக்கு சென்றவர் லொட்டரியில் 225,000 டொலர் பரிசை அள்ளிய சம்பவம் வெளியாகியுள்ளது.

மேரிலாந்து மாகாணத்தில் வனேசா வார்டு என்பவர் தமது தந்தையின் தொல்லை தாங்காமல் கடைக்கு முட்டைக்கோஸ் வாங்க சென்றுள்ளார்.

கடைக்கு சென்ற அவர் வின் எ ஸ்பின் என்ற லொட்டரி ஒன்றையும் வாங்கியுள்ளார். பரிசு விழும் என்ற நம்பிக்கை ஏதும் இல்லை என்பதால், குடியிருப்புக்கு வந்த பின்னரே அந்த லொட்டரியின் வெற்றி எண்களை பரிசோதித்துள்ளார்.

ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு 225,000 டொலர் பரிசாக விழுந்துள்ளது. உடனடியாக லொட்டரி வாங்கிய குறித்த கடைக்கு சென்ற அவர் தமது வங்கிக் கணக்கையும் குடியிருப்பு முகவரையை அளித்துள்ளார்.

இதுவரை தமக்கு லொட்டரியில் இவ்வளவு பெரிய தொகை எப்போதும் பரிசாக கிடைத்ததில்லை என கூறும் வனேசா,

தற்போது கிடைத்துள்ள பணத்தை, தாம் பணி ஓய்வு பெற்ற பின்னர் பயன்படுத்த இருப்பதாகவும், டிஸ்னி லாண்டிற்கு ஒரு முறை சென்று வரவேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் வனேசா தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்