கிளம்பிய சிறிது நேரத்தில் வெடித்து சிதறிய விமானம்: பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆட்டிச மைய கட்டிடத்துக்குள் புகுந்து விமானம் ஒன்று வெடித்து சிதறிய நிலையில் விமானி உட்பட இருவர் உயிரிழந்தனர்.

ப்ளோரிடாவில் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மையம் அமைந்துள்ளது.

இந்நிலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வேகமாக இந்த கட்டிடத்தின் உள்ளே புகுந்து சுவற்றின் மீது மோதி வெடித்து சிதறியது.

இதையடுத்து கட்டிடத்தின் உள்ளே இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பதறியடித்து கொண்டு வெளியேறினார்கள்.

விமானத்தின் உள்ளே எத்தனை பேர் இருந்தார்கள் என்ற தகவல் உடனடியாக தெரியாத நிலையில் சம்பவம் நடந்து இரு நாட்களுக்கு பின்னர் தற்போது தெரியவந்துள்ளது.

6 பேர் அமரக்கூடிய அந்த சிறிய விமானத்தில் எலாடியோ மார்கூ (51) என்ற விமானியும், உடன் ஒரு பயணியும் இருந்துள்ளனர்.

இருவரும் இவ்விபத்தில் இறந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே என்ஜின் பகுதியில் தீப்பற்றியதை உணர்ந்த மார்கூ இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்குள் விமானம் வெடித்து சிதறியது தெரியவந்தது.

இந்த விபத்தில் ஆட்டிச மைய கட்டிடத்தில் இருந்த யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்