துப்பாக்கிச்சூட்டில் ஏழு குண்டுகள் பாய்ந்த பெண் இப்போது எப்படி இருக்கிறாள்?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி Ella Whistler (13) அவள் படித்த பள்ளியின் மாணவன் ஒருவனாலேயே சுடப்பட்டாள்.

அந்த 13 வயது மாணவன் Ellaவை சுட்டபின் தன்னைப் பிடிக்கவந்த Jason Seaman என்னும் ஆசிரியரையும் சுட்டான்.

Jason ஒரு கால்பந்தை எடுத்து அவன் மேல் எறிந்து அவனைப் பிடித்தார். 13 வயது சிறுவன் என்பதால் அந்த சிறுவன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

அவன் 18 வயதை அடைந்ததும் மீண்டும் விசாரிக்கப்படுவான். Ellaவின் முகம், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்ததோடு, அவளது நுரையீரலும் பாதிக்கப்பட்டது, பல எலும்புகளும் முறிந்தன.

அவளது நிலைமை என்ன ஆகுமோ என அவளது பெற்றோர் கவலையில் ஆழ்ந்திருக்க, Ellaவோ தனது காயங்களிலிருந்து அதிசயிக்கும் வண்ணமாக மீண்டிருக்கிறாள்.

ஆறு மாதங்களுக்குமுன் உயிர் பிழைப்பாளா என்ற நிலையில் இருந்த Ella, குணமடைந்து விளையாட்டு போட்டி ஒன்றில் ஒரு சியர் லீடராக நடனமாடியது பலரையும் புருவம் உயர்த்தச் செய்தது.

தனது பள்ளிச் சீருடையை அணிந்திருந்த Ella, சியர் லீடர்களின் தலைவியாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடனம் தொடங்கியது முதல் முடியும் வரை முகத்தில் மாறாத புன்னகையுடன் அவள் நடனமாடுவதைக் காணலாம்.

Ella நடனமாடி முடித்ததும் அரங்கத்தில் கூடியிருந்த மக்கள் எழுப்பிய உற்சாக ஒலியால் அரங்கமே அதிர்ந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்