அமெரிக்காவில் வீசும் கடுமையான பனிப்புயல்: 1600 விமானங்கள் ரத்து

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் கடுமையாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக, சுமார் 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகனங்களை இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேலும், மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் சுமார் 1600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சிகாகோ விமான நிலையில் அதிகபட்சமாக 770 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடுமையான காற்று வீசும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கன்சாஸ், மிசவுரி, நெப்ரஸ்கா, அயோவா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் 2 கோடி மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பனிப்புயல் காரணமாக சுமார் 15,000 விமானங்கள் மிகவும் தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers