அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விக்கிபிடியாவில் நடந்த அதிர்ச்சி மாற்றம்! வைரலாகும் அசிங்கமான புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் விக்கிப்பிடியா பக்கத்தில் அவர் இருக்கும் புகைப்படத்திற்கு பதிலாக ஹெக்கர்கள் அசிங்கமான புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்ததால், அதைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டிரம்ப் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் திகதி பதவி ஏற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் இவரை எதிர்த்து நின்ற கிளாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த போது இவர் வெற்றி பெற்று ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

அதன் பின் இவர் எது செய்தாலும், சர்ச்சையில் போய் முடிந்துவிடுகிறது. அதுமட்டுமின்றி எந்த ஒரு முடிவு என்றாலும், யோசிக்காமல் முடிவு எடுப்பதால், அது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவிடுகிறது.

இதனால் பலரும் டிரம்ப் மீது ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஆப்பிள் போனில் இருக்கும் சிரி ஆப்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பற்றி கேட்ட போது, அவருடைய விக்கிப் பிடியாவில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக, மிகவும் அசிங்கமான புகைப்படம் வந்துள்ளது.

இது ஹெக்கர்களின் வேலையாகத் தான் இருக்கும் எனவும், கடந்த வியாழக்கிழமை பார்த்த அனைவருக்கும் இந்த புகைப்படம் வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் இது சரி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 2016-ஆம் ஆண்டு கிளாரி கிளிண்டனின் விக்கிபிடியாவும் ஹெக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்