வெளிநாட்டில் 16 வயது சிறுவனால் கொலை செய்யப்பட்ட இந்தியர்: ஊருக்கு திரும்ப நினைத்தவருக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 16 வயது சிறுவனால் இந்தியர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

நியூஜெர்சியின் வெண்டாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுனில் வசித்து வந்தார்.

விரைவில் இந்தியாவுக்கு வந்து கிறிஸ்துமஸ் மற்றும் தனது தாயின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்திருந்தார் சுனில்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்த சுனிலை 16 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொன்றுள்ளான்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சுனில் சடலத்தை கைப்பற்றிய நிலையில் சிறுவனை கைது செய்தனர்.

சிறுவன் எதற்காக சுனிலை கொலை செய்தான் என்ற முழு விபரம் இன்னும் தெரியவில்லை. முதற்கட்ட விசாரணையில் சுனில் காரை சிறுவன் திருடி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து காரை பொலிசார் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

சிறுவன் மீது கொலை, கொள்ளை, சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்தியது உட்பட 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுனிலின் உறவினர் ராஜ் என்பவர் கூறுகையில், கடந்த 1987-ஆம் ஆண்டு சுனில் அமெரிக்காவுக்கு வந்த போது அவருக்கு தேவையான உதவிகளை நான் தான் செய்தேன்.

வரும் 27-ஆம் திகதி இந்தியாவுக்கு சுனில் கிளம்பவிருந்தார்.

அதற்கான வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்