லொட்டரியில் பல மில்லியன் டொலர் அள்ளிய தம்பதி: பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லொட்டரியில் பல மில்லியன் டொலர் வெற்றிபெற்ற தம்பதி ஒன்று சிறையில் இருக்கும் தமது மகனை மீட்க அந்த பணத்தை பயன்படுத்த உள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Wichita County சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் 47 வயதான ஜேசன் வெய்ன் கார்லைல்.

14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவனுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தமது பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி ஒருவரை விலைக்கு வாங்கியதாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 டிசம்பர் மாதம் முதல் சிறையில் இருக்கும் இவரை இவரது பெற்றோர்கள் இந்த வாரம் 100,000 டொலர் பிணையில் வெளியே எடுக்க உள்ளனர்.

இவரது பெற்றோருக்கு லொட்டரியில் சுமார் 15.25 மில்லியன் டொலர் பரிசு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேசன் வெய்ன் மீதான விசாரணை அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில் பெற்றோர்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

பண விவகாரத்தில் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவர் அண்டை நாடான மெக்சிகோவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

ஆனால் அங்கே சாலை விபத்தில் சிக்கிய ஜேசன் வெய்ன், சிகிச்சைக்காக டெக்சாஸ் வந்துள்ளார்.

அப்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு 3,000 டொலருக்கு 15 வயது சிறுமியை விலைக்கு வாங்கிய குற்றத்திற்கு இவர் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துள்ளார்.

இவருக்கு சொந்த மகளை விற்பனை செய்த தாயாருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்