ஹாலோவீன் திருவிழாவில் மாணவிகள் அணிந்த ஆடையால் கிடைத்த தண்டனை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் பயங்கரமான குற்றவாளிகளை போல உடையணிந்து வந்த இரண்டு மாணவிகளை இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 1999ம் ஆண்டு, 18 வயதான எரிக் ஹாரிஸ் என்ற மாணவனும், 17 வயதான டிலான் கில்போல்ட் என்ற மாணவனும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 12 வகுப்பு தோழர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்க முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் ஹாலோவீன் திருவிழாவை, வித்யாசமான உடை அணிந்து கொண்டாட நினைத்த இரு மாணவிகள், எரிக், டிலான் போல உடை அணிந்து பள்ளிக்கு சென்றதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடிர் கவுண்டி உயர்நிலை பள்ளியானது சில காரணங்களுக்காக மாணவிகள் இருவரின் பெயரையும் வெளியிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்