பறக்கும் விமானத்தில் பாத்ரூமில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் மது போதையில் மர்ம நபர் ஒருவர், பாத்ரூமில் வைத்து தன்னை துஸ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஆபிரி லேனே என்ற 32 வயதான பெண், கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதியன்று அரிசோனாவில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி சென்ற ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது அதிகமான மது போதையில் இருந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், ஆபிரி பாத்ரூம் சென்றபோது அங்கு வைத்து தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து போன ஆபிரி, உடனடியாக விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஊழியர்கள், ஆபிரி கூறுவதை கண்டுகொள்ளாமல் விமானத்தின் பின் புறமாக ஒதுங்கியுள்ளனர்.

இதுசம்மந்தமாக விமான நிறுவனத்திடம் புகார் கொடுத்த போது, தொல்லை கொடுப்பதாக நினைத்து $5,000 டொலர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விமான நிறுவனம் மீது ஆபிரி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றி பேசிய சக பயணி ஒருவர், சம்பவம் நடந்த போது, இருவருமே மது போதையில் இருந்தனர். அடையாளம் தெரியாத அந்த நபர் 6 பானங்களை குடித்துவிட்டு, ஆபிரிக்கு முத்தம் கொடுக்க முயன்றார்.

பாத்ரூம் சென்றுவிட்டு திரும்பியதிலிருந்தே ஆபிரி ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தார். இந்த சம்பவம் பற்றி அவர் ஊழியர்களிடம் தெரிவிக்கவில்லை, ஏனெனில் அங்கு நடந்தது பற்றிய அதிர்ச்சியிலேயே அவர் விமானத்தில் பயணம் செய்தார் என விவரித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்