ஒரு முத்தத்தால் பரிதாபமாக பலியான குழந்தை: எச்சரிக்கும் 19 வயது தாய்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த 19 வயது தாய், தன்னுடைய குழந்தை அரியவகை வைரஸ் தாக்குதலுக்குட்பட்டு இறந்தது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஓக்லாண்ட் நகரத்தை சேர்ந்த 19 வயதான அபிகாயில் ரோஸ் என்ற பெண், பிறந்த குழந்தைக்கு நீங்களோ அல்லது உங்களுடைய உறவினர்களையோ முத்தம் கொடுக்க அனுமதிக்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், எங்களுடைய மகள் பிறந்த ஒருநாள் மட்டுமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அடுத்த 36 மணிநேரத்தில் மந்தமாக, காய்ச்சலுடன் காணப்பட்டாள். நான் பயந்துபோய் மருத்துவரை அழைத்தேன்.

பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர், குழந்தைக்கு ஹெர்பெஸ் வைரல் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கையை கழுவாமல் தூக்கியிருந்தாலோ அல்லது முத்தமிட்டிருந்தாலோ அந்த வைரஸ் தாக்குதல் வரும் என தெரிந்துகொண்டேன்.

ஆனால் அந்த வைரஸ் யாரிடம் இருந்து வந்தது என எனக்கு தெரியவில்லை. குழந்தை பிறந்த மறுநாள் என்னுடைய உறவினர்கள் நிறைய பேர் குழந்தையை பார்க்க வந்திருந்தனர்.

6 நாட்கள் என் மகள் வேதனையுடன் காணப்பட்டாள். அவளுக்க சிகிச்சை அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. இறுதியில் அவள் எங்களை விட்டு பிரிந்துவிட்டாள் என தெரிவித்துள்ளார். "அவளைப் பற்றி நான் யோசிக்காத ஒரு கணம் இல்லை, அவள் என் எண்ணங்களில் தினமும் இருக்கிறாள்" என வேதனையோடு மற்ற தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்