15 குழந்தைகளைக் கொன்று அவர்களது இரத்தத்தை குடிக்க வேண்டும்: சதித்திட்டம் அம்பலம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஃப்ளோரிடாவின் பள்ளி ஒன்றின் படிக்கும் இரு மாணவிகள் குறைந்தது 15 மாணவிகளைக் கொன்று அவர்களது இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என சதித்திட்டம் தீட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃப்ளோரிடாவிலுள்ள Bartow நடு நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி வகுப்புக்கு வரவில்லை என அவளது தாய்க்கு பள்ளியிலிருந்து மொபைலில் செய்தி வந்தது.

உடனடியாக அவர் பள்ளியைத் தொடர்பு கொண்டு தனது மகள் பள்ளிக்கு வந்தாள் என தெரிவிக்க பள்ளி ஊழியர்கள் அவர்களைத் தேடத் தொடங்கினர்.

இதற்கிடையில் முந்தைய நாள் இரு மாணவிகள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதை அறிந்த இன்னொரு மாணவி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்க, அது பற்றி விசாரிப்பதற்காக பள்ளிக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவிகளைத் தேடிய பள்ளி ஊழியர்கள் அவர்கள் பாத்ரூமில் ஒளிந்திருப்பதைக் கண்டனர்.

பொலிசாரும் விசாரணையில் இணைந்து கொள்ள, 11, 12 வயதுடைய அந்த மாணவிகள் கொடுத்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

தங்களை விட வயதில் சிறிய 15 முதல் 25 மாணவிகளை கழுத்தை அறுத்துக் கொன்று அவர்கள் இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்றும், பின்னர் அவர்களது உடல் பாகங்களை பள்ளி முன் வீசி விட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டிருந்தது தெரிய வந்ததும் பொலிசார் அவர்களைக் கைது செய்தனர்.

அவர்களது பைகளை சோதித்ததில் கத்திகள், கத்திரிக்கோல்கள், பீட்ஸா வெட்டும் கத்திகள் மற்றும் இரத்தத்தைக் குடிப்பதற்காக ஒரு ஒயின் கிளாஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்கள் வீடுகளை சோதனையிட்டதில், அவர்கள் பாத்ரூமில் கொல்ல வேண்டும் என்று எழுதி, படம் வரைந்து திட்டம் தீட்டிய அட்டைகளும், மொபைலில் கொலை செய்வது தொடர்பாக ஒருவருக்கொருவர் அனுப்பிக் கொண்ட குறுஞ்செய்திகளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

அந்த சிறுமிகள் உடனடியாக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்