ஒபாமா, கிளிண்டன் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல்! டிரம்ப் கூறியது என்ன தெரியுமா?

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஒபாமா ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட சம்பவத்திற்கு டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் உள்ள பில் கிளிண்டன் வீட்டிற்கும், வாஷிங்டனில் உள்ள ஒபாமாவின் வீட்டிற்கும் நாள்தோறும் வரும் கடிதங்கள் மற்றும் பார்சல்களை உளவுப்பிரிவு அதிகாரிகள் ஸ்கேன் செய்து பரிசோதிப்பது வழக்கம்.

இந்நிலையில் அதேபோல் வந்த பார்சல்களை பரிசோதித்தபோது, அவற்றில் ஒரு பார்சலில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, உளத்துறை மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இப்போது நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும். அமெரிக்காவில் அரசியல் வன்முறை செயல்களுக்கு இடம் கிடையாது என்ற செய்தியை தெளிவாகவும், ஸ்திரமாகவும் தெரிவிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்விவகாரம் மிகவும் வெறுக்கத்தக்கது என்றும், புலனாய்வு பிரிவு தீவிர விசாரணையை மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

AP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்