விமானத்தில் தன் செல்லப்பிராணியுடன் செல்ல அடம் பிடித்த மூதாட்டி: அதன் பின் நடந்த சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தான் ஆசையாக வளர்த்த அணிலை வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறிய மூதாட்டி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்திலிருந்து பிரன்டியர் ஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் ஒன்று பயணிகளுடன் கிளவ்லேண்டுக்கு புறப்பட தயாராக இருந்தது.

அப்போது விமானத்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் தான் ஆசையாக வளர்த்து வந்த அணில் குட்டி ஒன்றை உடன் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறியுள்ளார்.

இதைக் கண்ட விமான ஊழியர்கள் விமானத்தில் விலங்குகள் பயணிப்பதற்கு அனுமதியில்லை என்று கூற, ஆனால் மூதாட்ட அவர்களின் பேசை கேட்காமல் அணிலை உடனே வைத்துள்ளார்.

இதனால் விமான ஊழியர்கள் மற்றும் மூதாட்டிக்குமிடையே கடுமையான வாக்குவாதம் சென்றுள்ளது. அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக வந்த பொலிசார், மூதாட்டியை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

மூதாட்டியின் இந்த செயல் காரணமாக விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து மூதாட்டி வெளியேற்றப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers