ஃப்ளோரிடாவை சூறையாடிச் சென்ற மைக்கேல்: புகைப்படங்கள் இதுதான்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஃப்ளோரிடா Panhandle பகுதியை சூறையாடிய மைக்கேல் சூறாவளி அதன் வழியில் இருந்த ஒரு வீட்டைக் கூட விட்டு வைக்கவில்லை.

இரண்டு பேரை பலிகொண்ட மைக்கேல் சூறாவளி இதுவரை அமெரிக்காவைத் தாக்கிய புயல்களிலேயே மிகவும் மோசமானது என கருதப்படுகிறது.

ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நான்காம் வகை புயலாக வலுப்பெற்ற மைக்கேல், மணிக்கு 155 மைல் வேகத்தில் காற்றுகளைக் கொண்டு வந்தது.

நிலப்பரப்பை அடைந்ததும் மூன்றாம் வகை புயலாக வலுவிழந்த மைக்கேல் தற்போது ஒன்றாம் வகையாக குறைந்துள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு வீசப்பட்டுள்ளன, ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஜார்ஜியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஃப்ளோரிடாவின் Greensboro பகுதியில் ஒரு வீட்டின்மீது மரம் ஒன்று காற்றில் தூக்கி எறியப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

ஃப்ளோரிடா, ஜார்ஜியா மற்றும் அலபாமாவில் 500,000 வீடுகளும் அலுவலகங்களும் இருளில் மூழ்கியுள்ளன.

இதற்கிடையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்க்காததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்