நாய்கள் சிறுநீர் கழிக்க சாலையில் வைக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் சிலை.. சர்ச்சை புகைப்படம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பின் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புருக்ளின் பகுதியில் உள்ள சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.

அதன்கீழ் பகுதியில் ”என்மீது சிறுநீர் கழிக்கவும்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலையை பில் கேப்லே என்பவர் வடிவமைத்து வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers