ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை ராஜினாமா செய்த நிக்கி ஹாலே

Report Print Kabilan in அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் பதவியை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வம்சாவளி பெண்ணான நிக்கி ஹாலே, கடந்த 2017ஆம் ஆண்டு ஐ.நா சபையில் அமெரிக்காவின் 29வது தூதராக நியமிக்கப்பட்டார். மேலும், ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கரோலினா மாநிலத்தின் 116வது ஆளுநராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அவர் ஐ.நாவுக்கான தனது அமெரிக்க தூதர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ராஜினாமாவை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers