3 குழந்தைகளை நிர்வாணமாக வீட்டுச் சிறையில் வைத்திருந்த தம்பதி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சொந்த குழந்தைகளையே நிர்வாணமாக வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் Buckeye பகுதியை சேர்ந்தவர் Mayra Ramirez. வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டு திறந்த பொழுது, அழுக்கு உடை அணிந்த நிலையில் சிறுவன் ஒருவனும், அருகில் நிர்வாணமாக 5 வயது சிறுமியும் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே அந்த சிறுமிக்கு ஆடையினை உடுத்தி, சிறுமியின் வீட்டுக்கு அழைத்து சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் வந்து கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அந்த பெண் உடனே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கதவை திறந்து பார்த்த பொழுது, காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு Alsatia Inks, 23 என்ற பெண் படுக்கையில் இருந்ததை பார்த்தனர்.

பின்னர் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட போது, குழந்தைகள் இருவரும் வெளியில் சென்றது கூட தெரியாமல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, மற்றொரு 5 வயது சிறுவனையும் கண்டறிந்தனர்.

மேலும் சிறுவர்கள் தங்கியிருந்த படுக்கையறை மிகவும் மோசமாக, நாய் மற்றும் மனித கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. வீட்டின் சுவர் முழுவதும் கறைகளாக, மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையில் இல்லாமல் இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சிடையந்த பொலிஸார் சிறுவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவர்களின் பெற்றோர் Alsatia மற்றும் Zachary Pacheco (27) ஆகியோரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர். மேலும் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்