மனைவியை கணவர் தூக்கி சுமந்து செல்லும் போட்டியில் வெற்றி பெற்ற ஜோடி! எடைக்கு நிகராக வழங்கப்பட்ட பரிசு

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டியில், வென்ற நபருக்கு மனைவியின் எடைக்கு நிகராக பீர் கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மைனே என்ற இடத்தில் மனைவியை கணவர் தூக்கி சுமக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 834 அடி தூரம் மனைவியை தூக்கி சுமந்து முதலில் வரும் கணவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த போட்டி நேற்று நடைபெற்றது. அதில் 30 ஜோடி கணவன்-மனைவி பங்கேற்றனர். இறுதியாக ஜெசிவால்-கிறிஸ்டியன் ஆர் செனால்ட் ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் அவர்களுக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்த ஜோடிக்கு பரிசாக பீர் வழங்கப்பட்டது. அதுவும் ஜெசிவாலின் மனைவி கிறிஸ்டின் ஆர்செனால்ட் டின் எடைக்கு நிகரான பீர் பரிசளிக்கப்பட்டது. மேலும் ஆர்செனால்டின் எடையை போன்று 5 மடங்கு தொகை பணமும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் ஜெசிவால்-கிறிஸ்டின் ஆர்செனால்ட் தம்பதி 2-வது முறையாக வெற்றிபெற்றுள்ளனர். பின்லாந்தில் நடைபெற உள்ள உலக சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers