டிரம்ப் பேச்சுக்கு ஐ.நா சபையில் எழுந்த சிரிப்பலை

Report Print Kabilan in அமெரிக்கா

ஐ.நா சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசின் வெற்றிகரமான செயல்கள் குறித்து பேசிய போது அவையில் இருந்த தலைவர்கள் வாய்விட்டு சிரித்துள்ளனர்.

ஐ.நா பொதுச்சபையின் 73வது ஆண்டுக் கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் உரையாற்றியபோது, தனது அரசின் வெற்றிகரமான செயல்பாடுகளை அவர் பட்டியலிட்டார்.

அப்போது அவையில் இருந்த தலைவர்கள் வாய்விட்டு சிரித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டிரம்ப் கூறுகையில், ‘அவையோரின் கவனத்தை தன்பக்கம் இழுப்பதற்காக தான் அவ்வாறு பேசினேன். அவையினர் தன்னைப் பார்த்து சிரிக்கவில்லை.

அவர்கள் தன்னுடன் சேர்ந்து சிரித்தனர். மேலும் கைத்தட்டாத, சிரிக்காத பெரிய மனிதர்கள் யார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்