இறந்த தாயின் சடலத்தை பல மாதங்களாக வீட்டிலேயே வைத்திருந்த மகள்! அதிர்ச்சி காரணம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்த தாயின் சடலத்தை புதைக்காமல் வீட்டில் பத்திரமாக பல மாதங்கள் வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் Donna Sue Hudgins (69). இவர் இறந்த தன்னுடைய 93 வயது தாய் Nellie May Hudgins-ன் உடலை புதைக்காமல் வீட்டிலேயே பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது, அழுகிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அந்த உடலை கைப்பற்றிய பொலிஸார் Donna-வை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த பின்னர் ஒருவருடைய உடல் என்னவாகும் என்பதை பார்ப்பதற்காக தான் உடலை வீட்டில் வைத்திருந்தேன் என Donna பொலிஸாரிடத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து இறந்த Nellie-ன் பேரன் Kenny Velasquez கூறுகையில், எங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் நிறைய முறை பாட்டியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளோம். ஆனால் எப்பொழுது வீட்டிற்கு சென்றாலும், சிறிதளவு மட்டும் கதவை திறந்து கொண்டு, அம்மா உறங்கி கொண்டிருக்கிறார் பிறகு வாருங்கள் என Donna கூறிவிடுவார்.

போன் செய்து கேட்டால் கூட இப்படி தான் கூறுவார். கடந்த 7-ம் தேதியன்று திடீரென பாட்டி இறந்துவிட்டார் என எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால் வந்து பார்த்தபோது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தான் எடுத்து சென்றார்கள். ஆனால் எங்கே கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை என Donna தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து பொலிஸார், Nellie இறந்து பல மாதங்களாகி விட்டதால் தான் அவருடைய உடல் நன்கு அழுகி விட்டது என தெரிவித்துள்ளார். மேலும் Donna அவருடைய உறவினர்கள் அனைவரிடமும் பொய் சொல்லி ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்