மரண தண்டனைக்கு தப்பியவர் இன்று மணமகனாகிறார்: சுவாரஸ்ய சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Oklahoma சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ஒரு நபர், விஷ ஊசி போட்டு கொல்லப்பட வேண்டிய நேரத்தில் எதிர்பாராத விதமாக தண்டனை தள்ளி வைக்கப்பட்டதால் மூன்றாண்டுகளாக உயிருடன் இருக்கும் நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடக்க உள்ளது.

Richard Glossip (55), தனது எஜமானரைக் கொல்ல தனது சக ஊழியரை ஏற்பாடு செய்ததற்காக கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

கொலைக் குற்றத்திற்காக சிறையிலிருக்கும் Richardஇன் தண்டனையை நிறைவேற்றுவது மூன்றுமுறை தள்ளி வைக்கப்பட்டது.

மூன்றாவது முறை அவருக்கு கொடுக்க வேண்டிய விஷ மருந்திற்கு பதில் வேறு ஒரு மருந்தை பார்மசிஸ்ட் அனுப்பியதால் அவரது தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் Richardஇன் வழக்கைப் பற்றிக் கேள்விப்பட்ட Leigha Jurasik (21) என்னும் பெண்ணுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் Richardக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார். Richard மீதிருந்த ஈர்ப்பு காதலாகியது.

இந்நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் சிறையிலேயே திருமணம் நடைபெற உள்ளது.

இருவரும் சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், இன்று அரை மணி நேரம் மட்டும் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்கிடையில் விஷ ஊசி போட்டு கொல்வதற்கு பதிலாக நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி கொல்லும் திட்டத்தை Oklahoma சிறை அறிமுகப்படுத்த இருக்கிறது.

அப்படி நைட்ரஜன் வாயுவைச் செலுத்தி கொல்லும் திட்டத்தை அறிமுகப்படுத்தினால், அம்முறையில் கொல்லப்படும் முதல் நபராக Richard இருப்பார்.

இப்படி மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் திருமணம் தேவையா என்று கேட்டதற்கு, நானும் இதே கேள்வியை லட்சம் முறை அவளிடம் கேட்டுவிட்டேன், தங்களுக்கிடையே உள்ள அன்புதான் முக்கியம் வேறு எதுவும் இல்லை என்று அவள் கூறிவிட்டாள் என்கிறார் Richard.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்