இறந்து கிடந்த குழந்தை! ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வீடியோ கேம் விளையாட சென்றுள்ளார்.

வீடியோ கேமில் ஆழ்ந்த கவனத்தில் இருந்த தந்தைக்கு, தனது குழந்தையை குளியல் தொட்டிக்குள் வைத்தோம் என்ற நியாபகம் வரவில்லை.

சில மணிநேரங்கள் ஆனபின்னர் நியாபகம் வந்தவுடன் வேகமாக சென்று பார்த்துள்ளார், குழந்தை சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்துள்ளது. விசாரணையில் இந்த சம்பவம் நடைபெற்ற போது தாய் வீட்டில் இல்லை. மேலும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீடியோ கேம் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக இப்படி ஒரு உயிர் போயுள்ளது என தந்தை Cordarius Cotton கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்