16 வயதில் பலாத்காரம்: 32 ஆண்டுகளுக்கு பின்னர் மனம் திறந்த மொடல் அழகி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

16 வயதில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக இந்திய அமெரிக்க மொடல் அழகி பத்மாலட்சுமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வாழ் இந்தியரான பத்மாலட்சுமி (48 புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், 32 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நிகழ்ந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

இது தொடர்பாக, பிரபல பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள பத்மாலட்சுமி, கடந்த வாரம் அமெரிக்காவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்ட பிரட் கவான்னா மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்கள்.

இதையடுத்து, 32 ஆண்டுகளுக்கு முன் தனக்கு நிகழ்ந்த கொடுமையான சம்பவத்தை நினைவு கூறுகிறேன். எனக்கு 16 வயது இருக்கும்போது நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

அப்போது, எனக்கு 23 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் ஆண் நண்பராக இருந்தார். அவருடன் பழகிய ஒரு சில மாதங்களில் புத்தாண்டு தின கொண்டாட்டம் வந்தது.

அப்போது, நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன். இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். உடனடியாக அவர்கள் என்னை இந்தியாவில் உள்ள தாத்தா, பாட்டி வீட்டில் ஓராண்டு இருக்கும்படி அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் நான் அறிந்த பாடம், நீங்கள் இது குறித்து பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என்பதாகும். இந்த அனுபவங்கள் என்னையும், நம்பிக்கை மீதான எனது திறனையும் பாதித்தன என்று அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்