தேனிலவுக்கு புதுமாப்பிள்ளையாக சென்று உயிரற்ற சடலமாக திரும்பிய சோகம் : கண்ணீர் சிந்திய புதுப்பெண்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

ஹவாயில் தேனிலவு சென்ற இடத்தில் காணாமல் போன கணவன் 4 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Stephen Kramar - Jeffanie Kramar ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாள் புதுமணத்தம்பதியினர் ஹவாய்க்கு தேனிலவு சென்றுள்ளனர்.

Kaunakakai என்ற இடத்தில் உள்ள தங்கியிருந்த இவர்கள், அங்கிருந்த ரிசாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்புகையில், தனது மனைவியுடம் நீ செல், நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

உடனே மனைவியும் ரிசார்ட்டில் இருந்து தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு சென்றுள்ளார். சில மணிநேரம் கழித்தும் கணவர் வராத காரணத்தால் போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் கணவரின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ரிசார்ட்டு சென்று பார்த்துள்ளார், ஆனால் அங்கு கணவரை காணவில்லை. இதனைத்தொடர்ந்து பொலிசில் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கிருந்த தனது வீட்டிற்கு சென்று கணவரை தேடும் பணியில் ஈடுபட்டார்.

கணவர் காணாமல் போன நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் ரிசார்ட்டில் இருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தனது கணவரை சடலமாக பார்த்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.

ஆசையாக தொடங்கிய வாழ்க்க இவ்வளவு வேகத்தில் முடிவும் என நினைக்கவில்லை என மனைவி கூறியுள்ளார்.

இவரின் மரணம் குறித்து பொலிசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்