டயர் வெடித்ததால் பேருந்துடன் லொறி மோதி பெரும் விபத்து: 7 பேர் மரணம், பலர் படுகாயம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் New Mexico பகுதியில் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லொறி ஒன்றின் டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாடிழந்த அந்த லொறி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தின்மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர், 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

Phoenix நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட 49 பயணிகள் இருந்தனர்.

அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த லொறி ஒன்றின் டயர் வெடித்ததால் கட்டுப்பாடிழந்த அந்த லொறி பேருந்தின்மீது மோதியிருக்கிறது.

விபத்து நடந்த இடத்தைப் பார்த்தவர்கள் பேருந்தில் சிக்கியிருந்தவர்கள் கூக்குரலிடுவதைக் காண்பதற்கு பயங்கரமான காட்சியாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்கள்.

பொலிசார் விபத்து குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்