5 குழந்தைகளின் தாய்க்கு ஆண்நண்பரால் ஏற்பட்ட பரிதாப நிலைமை! வெளியான திடுக்கிடும் பின்னணி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளின் தாயை அவரின் ஆண் நண்பர் காரின் பிரேக் வயரை கட் செய்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தைச் சேர்ந்தவர் John Jenkins(39). ஐந்து குழந்தைக்கு தாயாரான இவர் கடந்த 22-ஆம் திகதி கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இது குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் Tammy Fox(38), என்ற நபரை பொலிசார் கடந்த 29-ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம வெளியிட்டுள்ள செய்தியில், Tammy Fox உயிரிழந்ததற்கு அவரின் நெருங்கிய நண்பர் John Jenkins தான் காரணம், அவர் தான் Tammy Fox-ம் காரில் உள்ள மூன்று பிரேக் வயர்களின் லயன்களை கட் செய்துள்ளார்.

ஆனால் இது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலையும் சொல்ல மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் அவர் என்ன காரணத்திற்காக பிரேக் வயரை கட் செய்தார் என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் Tammy Fox 5 குழந்தைகளுக்கு தாய் என்பதால், தற்போது அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக GoFundMe-யில் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட நபர் அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்