அம்மாவின் கண் மூடியும்..முகம் இரத்தம் வடிந்தும் இருந்தது! குழந்தை சொன்ன நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கடவுள் சொன்னதால், மனைவியின் தலையை துண்டாக வெட்டினேன் என்று கணவன் பொலிசாரிடம் கூறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள Mount Vernon பகுதியைச் சேர்ந்தவர் Timothy Paul Hernandez(32). இவருக்கு Vanessa Cons என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் Timothy Paul Hernandez, தன்னுடைய மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின் அவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடவுள் சொன்னதால், அவளை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

கடவுளின் வார்த்தைகளை அவள் பின்பற்றவில்லை, இதனால் கடவுள் அவள் பரிதாபத்திற்குரியவள் அல்ல கொன்றுவிடு என்று கூறினார் அதன் பின்னரே அவளின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்தேன்.

இந்த சம்பவத்தைக் கண்ட அவரின் குழந்தை பொலிசாரிடம் கூறுகையில், அப்பா ஒரு பெரிய கத்தியை வைத்து அம்மாவை வெட்டினார். அப்போது அம்மாவின் கண்கள் மூடிய நிலையிலும், முகத்தில் இரத்தம் வடிந்த நிலையிலும் இருந்தது.

எனக்கு என்ன என்று புரியவில்லை, அப்போது அப்பா அம்மாவிற்கு goodbye சொல்லு என்று கூறியதாக குழந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் Vanessa Cons-ன் சகோதரி, அவள் மிகவும் அன்பானவள், குழந்தையையே தன்னுடைய உயிராக நினைத்திருந்தாள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்