மனிதக் கழிவுகளால் நிரம்பி வழியும் சான் பிரான்சிஸ்கோ: காத்திருக்கும் பாரிய ஆபத்து

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

சான் பிரான்சிஸ்கோவில் மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 65 தடவை நகர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஜனவரி 1 முதல் ஆகஸ்ட்டு 13 வரையில் 14 597 அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

தற்போது நகரின் அலுவலர்கள் அதற்கான தீர்வுகளை எடுத்தவண்ணம் உள்ளனர்.

அடுத்த மாதத்திலிருந்து 5 பொது வேலையாட்கள் கொண்ட குழுவொன்று அதன் அண்மை நகரமான ரென்டலொயின் நகரிற்கு ஆவி சுத்திகரிப்புடன் கூடிய வாகனத்துடன் செல்லவுள்ளனர்.

இவர்கள் அதன் ஒழுங்கைகளில் மேற்படி சுத்திகரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கடந்த பெப்ரவரியில் NBC விசாரணைப் பிரிவானது 3 நாட்கள் கொண்ட கணக்கெடுப்பொன்றை மேற்கொண்டிருந்தது.

இம் மனிதக் கழிவுப் பிரச்சனையானது அருவருப்பிற்குரியது, இது பாதிப்பு நிறைந்தது.

இக் கழிவுகள் உலரும் போது சில கூறுகள் காற்றில் பரவும் தன்மைக்கு மாறுகின்றன. இவை அநேகமாக ஆபத்தான வைரசுக்களைப் பரப்பமுடியும். இக் கிருமிகளை சுவாசத்தினூடு உள்ளெடுத்தல் என்பது ஆபத்தானது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்