முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணின் முகத்தை கடித்த நாய்: அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தன்னை செல்லமாக தடவி முத்தம் கொடுக்க முயன்ற பெண்ணை, நாய் ஒன்று கடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் Arvada பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம் ஒன்றில், கடந்த 7-ம் தேதியன்று இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த பொலிஸார், தற்போது உணவகத்தில் உள்ள வீடியோவினை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் மொடல் அழகி தனியாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகாமையில் ஒரு நாயும் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த நாயை அங்கிருக்கும் அனைவருமே தங்களுக்கு அருகில் அழைத்து கொஞ்சுகின்றனர்.

அவ்வாறு மொடல் அழகியும் நாயை அழைத்து கொஞ்சுகிறார். பின்னர் அங்கு வந்த மற்றொரு நபரிடம் அந்த நாய் செல்கிறது. அதனை மீண்டும் கொஞ்சும் நினைப்பில், நாயை அருகில் இழுத்து அதனை முத்தமிட முயல்கிறார். யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் திடீரென, அந்த பெண்ணை நோக்கி பாய்ந்த நாய் முகத்தில் கடித்து விடுகிறது.

இதனையடுத்து அங்கிருந்த அனைவரும் வேகமாக எழுந்து அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயத்தினை பார்வையிடுகின்றனர். இதற்கிடையில் நாயின் உரிமையாளர், வேகமாக அங்கிருந்து கிளம்புவதை போல அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உணவக உரிமையாளர் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, அவரது முகத்திலும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் மீது வழக்கு தொடரலாமா என கேட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் மறுப்பு தெரிவித்து விட்டார் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்