மகளை துஷ்பிரயோகம் செய்ததோடு நண்பருக்கு விருந்து வைத்த அப்பா: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 13 வயது மகளை மாற்றாந் தந்தை தனது நண்பரான பாதிரியாருடன் சேர்ந்து பலமுறை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவோ ரோகர் என்பவரின் மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 13 வயது சிறுமியை ரோகர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதோடு தனது நண்பரான ரிக்கார்டோ என்ற பாதிரியாருக்கும் தனது மகளை ரோகர் அறிமுகம் செய்து வைத்த நிலையில் அவரும் பல முறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது குறித்து வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் எனவும், பில்லி சூனியம் வைத்து விடுவோம் எனவும் ரோகரும், ரிக்கார்டோவும் சிறுமியை தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து பொலிசார் ரோகரையும், ரிக்கார்டோவையும் கைது செய்தனர்.

இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்