ஒரே நேரத்தில் 16 தாதியர்கள் கர்ப்பம்தரிப்பு: பரபரப்பில் அரிசோனா வைத்தியசாலை

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள மெசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் தாதியர்கள் 16 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் அவ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுபவர்கள்.

இந்த எண்ணிக்கையானது குறித்த வைத்தியசாலையில் பணிபுரியும் மொத்த தாதியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் ஆகும்.

இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.

அதாவது எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்தில் நீண்ட விடுமுறை எடுக்கும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு கர்ப்பம் தரித்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வைத்தியசாலை தண்ணீரில் எதாவது விசேட தன்மை இருக்கலாம் என்றும் சுவாரஸ்யமாக கூறப்படுகின்றது.

இத் தாதியர்கள் அனைவரும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் தமது முதலாவது குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்