காரில் சிக்கி தவித்த குழந்தையை காப்பாற்ற தோளில் தூக்கிக் கொண்டு ஓடிய பொலிஸ்! வெளியான நெகிழ்ச்சி வீடியோ

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் காரில் சிக்கித் தவித்த குழந்தையை மீட்டு அவரை காப்பாற்றுவதற்காக பொலிசார் தூக்கிக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த Casey Keller என்ற 33 வயது தாய், தன் மூன்று வயது மகளுடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது கடைக்கு சென்ற இவர், காரின் உள்ளே இருந்த மகளை தூக்கிச் செல்லாமல் மறந்த நிலையில் காரின் உள்ளேயே வைத்து காரை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின் காரின் உள்ளே வந்த அவர் குழந்தையை பற்றி நினைப்பே இல்லாமல் வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

பூட்டப்பட்ட காரில் சிறுமி வெகு நேரம் இருந்ததால், அவர் மயக்கநிலையை அடைந்துள்ளார். வீட்டிற்கு வந்து காரை விட்டு இறங்கிய பின்பே குழந்தை இருப்பதை அறிந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, பொலிசார் அந்த சிறுமியை கையில் தூக்கிக் கொண்டு காப்பாற்ற ஓடியுள்ளார்.

இதையடுத்து பொலிஸ் காரில் குழந்தையை அழைத்துச் சென்ற அவர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், நான் குழந்தையை தூக்கினேன், அப்போது அவர் பேச்சு மூச்சின்றி இறந்தார். நான் இறந்துவிட்டாள் என்று பயந்தேன்.

அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு பிறகு சிறுமி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்