விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த நபர்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Report Print Santhan in அமெரிக்கா

விமானத்தில் தூங்கிய பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லைகள் செய்த நபர் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பிரபு ராமமூர்த்தி(35) என்ற இந்தியர் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன் தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் பயணம் செய்தார்.

அப்போது 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுவில் பிரபு ராமமூர்த்தியும், அவரது இடதுபுறம் மனைவியும், வலதுபுறம் ஜன்னலோரம் 22 வயதான மற்றொரு பெண்ணும் அமர்ந்து இருந்தனர்.

இளம் பெண் ஒருவர் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, ராமமூர்த்தி பாலியல் ரீதியில் தொல்லைகள் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரது கைகள் தன் உடல் மீது படர்வதை உணர்ந்து, அந்தப் பெண் கண் விழித்துள்ளார். அதன் பின் அவர் தனது ஆடைகள் கலைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து இது தொடர்பாக அப்பெண் டெர்ரன்ஸ் பெர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

தற்போது இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.

தண்டனை விவரம் டிசம்பர் மாதம் 12-ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...