மகளை பின் தொடர்ந்த இளைஞருக்கு தந்தை கொடுத்த அதிகபட்ச தண்டனை!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் மகளை பின் தொடர்ந்து பாத்ரூம் வரை சென்ற இளைஞரை, பெண்ணின் தந்தை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த Melvin Harris (40) என்பவர், கடந்த 2-ம் தேதியன்று மால் ஒன்றிற்கு சென்றிருக்கும் தன்னுடைய மகள் மற்றும் அவளுடைய இரண்டு நண்பர்களையும் அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார்.

அங்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற போது, தனது மகளை ஒருவன் பின் தொடந்து சென்று பெண்கள் பாத்ரூமில் வைத்து கதவை தாழ்பாளிட்டதாகவும், பின்னர் சிசிடிவியின் உதவியுடன் பாதுகாவலர்கள் மகளை மீட்டதாகவும், அவளுடைய தோழிகள் கூறி கேள்விப்பட்டார்.

இதனையடுத்து ஆத்திரமடைந்த Melvin, பாதுகாவலர்கள் பிடியில் இருந்த அந்த இளைஞரை நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறி தன்னுடைய காரில் அழைத்து சென்றுள்ளார். கற்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு அழைத்து சென்ற அவர், அங்கு வைத்து இளைஞர் மீது கொடூரமாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் சிறிது நேரத்திலேயே அந்த இளைஞர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், மயக்கத்தில் இருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், முகத்தில் அதிமுறை குத்தியதால், இளைஞரின் கழுத்து பகுதி உடைந்ததுடன், மூளைப்பகுதியிலும் காயம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் Melvin-ஐ கைது செய்த பொலிஸார், இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் Leon Armstrong (26) என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers