அழகியின் முகம் இப்படி மாறக் காரணம்? நெஞ்சை உருக்கும் உண்மை கதை

Report Print Fathima Fathima in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்று முகம் முழுவதும் சிதைந்து உயிருக்கு போராடிய நிலையில் அறுவைசிகிச்சையின் மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கேட்டி, இவருக்கு 16 வயதாக இருக்கும் கெண்டகிக்கு குடிபெயர்ந்தனர்.

அங்கு புதிய பள்ளியில் ஒரு மாணவரை பார்த்ததும் காதலில் விழுந்தார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு கேட்டிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது.

இச்சூழலில் காதலனின் போனில் மற்றொரு பெண்ணின் மெசேஜை பார்த்ததும் துடிதுடித்து போனார்.

மன உளைச்சலுக்கு ஆளான கேட்டி, குளியலறை சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர், கேட்டியின் முகம் முழுவதும் சிதைந்து போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர் பிழைத்தாலும் மூச்சு விடுவது, சாப்பிடுவது எல்லாம் சிரமமாகி போனது.

சில மாத சிகிச்சைக்கு பின்னர், கேட்டிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்தனர்.

க்ளீவ்லாண்டு மருத்துவமனை கடைசியில் இதற்கு ஒப்புக்கொள்ள, கடந்த 2017ம் ஆண்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பார்வை பறிபோனதால் பிரெய்லி முறையில் படிக்க ஆரம்பித்த கேட்டி, பேசவும், நடக்கவும் பயிற்சி எடுத்து வருகிறார்.

தனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கை அற்புதமானது என்றும், புதிய முகம் அழகாக இருப்பதாகவும் நெகிழும் கேட்டி, தன்னைப் போன்று தற்கொலையிலிருந்து தப்பியவர்களுக்காக வேலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers