ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த பாதிரியார்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதிரியார்கள் பலாத்காரம் செய்துள்ளதாக ஜூரிகளின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பென்சில்வேனியா மாநிலத்தில் சுமார் 300 ரோமன் கத்தோலிக்க பாதிரியார்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1940களிலிருந்து முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் செய்துள்ளதாக தற்போது மாநில தலைமை நீதிபதிகள் குழு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

900 பக்க அதிர்ச்சி அறிக்கையில். சிறுவர் சிறுமியரை பாதிரிமார்கள் பலாத்காரம் செய்துள்ளனர், கடவுளின் மனிதர்களான இவர்கள் இதற்குப் பொறுப்பேற்காததுடன் ஒன்றுமே செய்யவில்லை என்பதுடன் இந்தப் பாவச்செயலை மறைத்தும் உள்ளனர்

தவறு செய்தவர்களைக் காத்ததுடன், தவறு செய்தவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க சர்ச் பாலியல் சுரண்டல்கள் எனும் புத்தகத்தை அவ்வளவு எளிதில் மூடிவிட முடியாது.

இந்த குற்றங்களை செய்துள்ள பாதிரியார்களில் 100 பேர் இறந்துள்ளனர், ஒரு சிலர் பணி ஓய்வு பெற்றுள்ளனர் மற்றும் பலர் விடுப்பில் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஆனால், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அட்டர்னி ஜெனரல் ஜோஷ் ஷபிரோ தெரிவித்துள்ளார்.

சுமார் 1.7 மில்லியன் கத்தோலிக்கர்களை பிரதிநிதித்துவம் செய்யும் 8 பாதிரிமார்களில் 6 பேர் மீது கடுமையான விசாரணை நடைபெற்றுள்ளதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கை வழக்காக மாறும்போது பெரிய போராட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிரியார் 9 வயதுச் சிறுவனை மோசமான முறையில் பலாத்காரம் செய்து பிறகு புனித நீரால் சிறுவனின் வாயைக் கழுவியதும் பெரிய சர்ச்சைக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்