வரலாற்றில் மிகப் பெரிய காட்டுதீ

Report Print Kavitha in அமெரிக்கா

கலிஃபோர்னியாவின் (Mendocino complex fire) சிக்கலான காட்டுத்தீ என அழைக்கப்படும் இரட்டை காட்டுத்தீ வரலாற்றில் மிகப் பெரிய காட்டுத்தீ அனர்தமாக பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெரும்பாலான பிரதேசத்தினை சுமார் 283, 800 ஏக்கர் பரப்பிலான பகுதியினை எரித்துச் சாம்பலாக்கியது.

காட்டுத்தீயின் ஆதிக்கத்தினால் மாநிலத்தின் வடக்கு பகுதியில் இதுவரையில் குறைந்தது 7 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயினால் மாநிலம் முழுவதிலுமாக ஏற்படவுள்ள 16 மிகப்பெரிய வெடிப்புச் சம்பவங்களை தடுக்க தீயணைப்புப் பணியாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கலிபோர்னியாவில் உள்ள மோசமான சுற்றுசூழல் சட்டங்களினால் தீ பரவிவருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

இதனால் நாட்டில் இடம்பெற்றுவரும் அழிவுகளுக்கு சரியான தீர்வு பெறாமல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பற்ற விதமாக கருத்து தெரிவிப்பதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் விமர்சித்து அவருடைய பதிவுகளை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்