குட்டையான கவர்ச்சி ஆடை அணிந்ததால் துரத்தியடிக்கப்பட்ட அழகிய பெண்: கலங்கி போய் செய்த செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் வணிக வளாகத்துக்குள் குட்டையான ஆடை அணிந்து சென்ற காரணத்துக்காக இளம் பெண்ணொருவர் அங்கிருந்து வெளியில் துரத்தப்பட்டுள்ளார்.

கேப்ரிலி கிப்சன் (19) என்ற பெண் அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார்.

அப்போது அவரின் உடை மிகவும் சிறியதாக இருப்பதாக கூறி பாதுகாப்பு ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அவரை வெளியில் துரத்தியுள்ளனர்.

இது குறித்து கிப்சன் கூறுகையில், வணிக வளாகத்திலிருந்து மகிழ்ச்சியாக தான் வெளியேறினேன்.

ஆனால் ஊழியர்கள் என்னிடம் தவறாக பேசிய முறை என்னைப்பற்றி என்னையே வருத்தப்பட வைத்தது.

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வளாகத்துக்குள் வந்தேன். ஆனால் இப்படி ஆகிவிட்டது என கூறியுள்ளார்.

இதையடுத்து தான் அணிந்திருந்த உடையுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை கிப்சன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், தான் துன்புறுத்தப்பட்டு வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வெளியேறவில்லை என்றால் பொலிசாரை அழைப்போம் என மிரட்டப்பட்டதாகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்