மூன்று மாதங்களாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண்! காப்பாற்றிய தபால்காரர்: நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்டு தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு இளம்பெண் ஒரு தபால்காரரால் மீட்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.

Placervilleயில் வாழும் Crystal Allen (16) ஒரு விடுதியில் தங்கியிருந்தாள். அவளது தோழி ஒருத்தி அவளை ஏமாற்றி Sacramento என்னும் இடத்திலுள்ள பாலியல் விடுதி ஒன்றில் கொண்டு விட்டு விட்டாள்.

அங்கு மூன்று மாதங்கள் அடித்து உதைக்கப்பட்டு, போதை ஊசிகள் போடப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டாள் Crystal.

பெரும்பாலும் தன்னைச் சங்கிலிகளால் கட்டி வைத்திருந்ததாகக் கூறும் Crystal, ஒரு நாள் ஒரு வாகனத்தில் வைத்து இன்னொரு இடத்திற்கு அவளைக் கொண்டு செல்லும்போது தப்பி விட்டாள்.

அந்த வழியாக தபால்களை விநியோகிப்பதற்காக வந்த தபால்காரரான Ivan Crisostomo யாரோ ஒரு புதருக்குப்பின் விசும்பும் குரல் கேட்டு, சென்று பார்த்தபோது Crystal அழுது கொண்டிருப்பதைக் கண்டார்.

தன்னைக் காப்பாற்றுமாறு அவள் அழ, அவளைத் தனது தபால் வாகனத்தில் ஏற்றி பத்திரமாக வைத்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார்.

பொலிசார் வந்து அவளை பாதுகாப்பாக அவளது குடும்பத்துடன் சேர்த்திருக்கிறார்கள். பல வாகனங்கள் ஒன்றும் நடவாததுபோல் அந்த இடத்தைக் கடந்து சென்ற நிலையில் Ivanம் அப்படியே Crystalஐ விட்டு விட்டு சென்றிருக்க முடியும் என்றாலும் அவர் அப்படி செல்லவில்லை.

அதனால் Ivanஐ Crystalஇன் குடும்பம் சந்தித்ததோடு, தன்னைக் காப்பாற்றியதற்காக Crystal அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள். ஆனால் Ivanஓ, அவளைக் காப்பாற்றியது தனது கடமைகளில் ஒன்று என்று கருதுவதாக மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்