அமெரிக்காவில் இந்த விமான நிலையங்களில் பயணிகளை சோதனை செய்யாமாட்டார்களா? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள 150 சிறு விமானநிலையங்களில் பயணிகள் சோதனை ரத்து செய்யப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் அந்நாட்டின் முக்கிய விமானநிலையங்களில் மட்டுமின்றி, சிறிய விமானநிலையங்களிலும் பயணிகளின் சோதனை அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் 786 கோடி ரூபாய் செலவைக் குறைக்கும் வகையில் 60 மற்றும் அதற்கு குறைவான இருக்கைகளைக் கொண்ட விமானங்களை மட்டும் கையாளும் 150 சிறிய விமான நிலையங்களில் பயணிகள் சோதனையை ரத்து செய்ய, TSA எனப்படும் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அமைப்பு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரிய விமான நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் ஆனால் இதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படவில்லை என்று டிஎஸ்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்