சிறுவனின் காதை வெட்டிய முடி திருத்துபவர்: சுவாரஸ்ய வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் முடி திருத்துபவர் ஒருவர் தன்னிடம் முடி வெட்டிக் கொள்ள வந்த சிறுவனின் காதை வெட்டிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Vito DiPalma சிறு குழந்தையாக இருந்ததிலிருந்தே அவனுக்கு முடி வெட்டுபவர் Jude Sannicandro.

இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றி விளையாடுவது வழக்கம். சமீபத்தில் ஒரு பொம்மைக் கரப்பான் பூச்சியை Sannicandroவின் கடையில் போட்டு பயமுறுத்தினான் Vito.

அதற்கு பதிலாக அவனிடம் விளையாட முடிவு செய்தார் Sannicandro, Vitoவின் பெற்றோரின் அனுமதியுடன். Vitoவுக்கு முடி வெட்ட ஆரம்பித்த அவர், கிட்டத்தட்ட முடி வெட்டி முடித்த நிலையில் திடீரென அச்சச்சோ என்று கூற, திடுக்கிட்ட Vito, என்ன ஆயிற்று, காயம் பட்டு விட்டதா? என்று கேட்கிறான்.

ஒன்றும் பெரிதாக இல்லை என்று கூறும் Sannicandro, மறைத்து வைத்திருந்த ஒரு துணியை எடுத்து அதிலிருந்த சிவப்பு நிற சாயத்தை அவன் காதில் வடிய விடுகிறார். பயந்து போன Vito, அம்மாவைக் கூப்பிடுங்கள் என்று கத்துகிறான்.

வேண்டாம், அம்மாவுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கூறும் Sannicandro, தான் மறைத்து வைத்திருந்த ஒரு பொம்மைக் காதை கீழே விழச் செய்கிறார்.

அது என் காதா? என்று கேட்டு Vito பயந்து அலற, சரியாக அவனது தாயும் உள்ளே வருகிறார்.

கடைசியில் போதும் சர்ப்ரைஸ் என்று முடிவு செய்த அனைவரும் Vitoவிடம் உண்மையைக் கூற, அவன் முகத்தில் அசடு அழிகிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு வீடியோ.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்