நடுவானில் பாதை மாறிய ஏவுகணை: கடைசி நொடியில் வெடித்து சிதறியது! திக் திக் நிமிடங்கள்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் ஏவுகணை சோதனையின் போது ஏற்பட்ட பிரச்சனையால், வானத்திலேயே ஏவுகணை அழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க விமானப் படை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று புதிய ரக ஏவுகணையான மினிட்மேன் 3-யை அமெரிக்கா சோதனை செய்தது.

ஏற்கனவே, மினிட்மேன் 1 மற்றும் மினிட்மேன் 2 ஆகிய இரு ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மினிட்மேன் 3-யும் போர் விமானத்தளத்தில் இருந்து ஏவப்பட்டது.

ஆனால், இந்த ஏவுகணை பறந்து கொண்டு இருக்கும் போதே பிரச்சனையில் சிக்கியது. அதாவது, விமானப்படை நிர்ணயித்த புள்ளியை விட்டு ஏவுகணை விலகி சென்றது.

இதனால், பதட்டமடைந்த விமானப்படை அதிகாரிகள், பறக்கும் போதே ஏவுகணையை வெடிக்க செய்தனர். இதனால் பெரும் அசம்பவாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்